கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “பாஜகவிலிருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம். அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணாமலை பற்றி இனி நான் கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தரமான பொய்யர், தர்மத்திற்கு எதிரான தலைவர். அண்ணாமலை மீது காவல்துறையில் புகாரளிக்க தயாராக உள்ளேன். பெண்களுக்கு சம உரிமை, மரியாதை தராததால் தமிழக பாஜகவிலிருந்து விலகி உள்ளேன்” என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.