நடிகை தமன்னா “எனக்கு டாக்டர் ஒருவருடன் திருமணம், தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என்று வதந்திகள் கிளம்பி வருகிறது. இது அனைத்தும் பொய்யான தகவல். நான் எனது திருமண தேதியை முறைப்படி அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளாக சினிமாத்துறையில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. அவர் விஜய், அஜீத் போன்ற பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தமன்னா வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும், வரன் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் இன்னும் தமன்னாவுக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமன்னாவை திருமணம் செய்பவர் டாக்டர் என்றும் தொழிலதிபர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. “திருமணம் குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, திருமணத்தின் போது நானே அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.