‘ராஜா ராணி’ படத்தின் இயக்குநரான அட்லீ, சின்னத் திரையில் அறிமுகமாகி வெள்ளித் திரையில் நடித்து வரும் நடிகை பிரியாவை மணக்கிறார். இவர் களது திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையிலுள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர விடுதியில் நடந்தது.
இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் உதவியா ளராக இருந்தவர் அட்லீ. இவர் கடந்த ஆண்டு ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
நடிகை ப்ரியா சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து கவனம் பெற்றவர். இதை அடுத்து ‘சிங்கம்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அட்லீ, பிரியா இருவரும் நெருக்க மான நண்பர்களாக இருந்து காதலர் களாக மாறியிருக்கிறார்கள். காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிச்சய தார்த்தம் நடந்துள்ளது. திருமணம் நவ.9-ம் தேதி சென்னையில் நடக்கிறது.