நேற்று பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் வெளியானது. அதில், 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய நந்தினியின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி மாணவி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு 600 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று அவர் முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற்றார். இச்சந்திப்பைப் பற்றி நந்தினி கூறும் போது, தனது உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதலமைச்சர் என்னிடம் கூறினார். அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது சார்பிலும் என் குடும்பத்தின் சார்பிலும் எனது பள்ளி நிர்வாகம் சார்பிலும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது விடாமுயற்சி மற்றும் கடினமான உழைப்பு காரணமாகத்தான் இந்த வெற்றி எனக்கு கிடைத்தது” என கூறினார்.