நமீதா பேட்டி!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

நடிகை நமீதா, “கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவையில் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகை நமீதா, “பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் பாரதிய ஜனதா கட்சியை நன்கு வளர்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி பெயர் தான் ஒலிக்கிறது. கர்நாடக தேர்தல் தோல்வி ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அடுத்த முறை வெற்றி பெறுவோம், என்றும் அது மட்டுமின்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாரதிய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும். அண்ணாமலை மீது பிரதமர் மோடி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், அவர் தமிழகத்தையும் ஆட்சியைப் பிடித்து காட்டுவார்” என்றும் நமீதா தெரிவித்தார்.