நயன்தாரா “ஜவான்” புரமோஷனுக்கும் மிஸ்ஸிங்!

Filed under: சினிமா |

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையின் பிரபல கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் ஷாருக் கான், அட்லி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகியான நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. சமீபகாலமாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால் தன்னுடைய சொந்த பேனர் தயாரித்து அதில் நடிக்கும் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்கிறார்.