நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முதன் முதலாக திறக்கப்பட்ட வங்கி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியாகும். அக்டோபர் 1977ல் நாகூர் தெருப்பள்ளி தெருவில் திறக்கப்பட்டு சிறப்பாக 44 வருடங்களாக இயங்கிவந்தது. கட்டிட மேம்பாடு தேவையின் காரணமாக இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிதான கட்டிடத்தில் நாகூர் மெயின் ரோடு அரசு மருத்துவமனை எதிரே இன்று திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைக்கினங்க பல்வேறு புதிய வசதிகள் இங்கு ஏற்படுத்தபட்டுள்ளன.
புதிய வங்கி அலுவலகத்தை நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும் முன்னாள் தர்கா பிரசிடன்டுமான செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி திறந்து வைத்தார். புதிய ஏடிஏம் மெசினை தமிழக அரசின் (மு) சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் டாக்டர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் திறந்து வைத்தார். பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்யபட்டது. இந்த விழாவில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தலைமை அதிகாரி, மாவட்ட அதிகாரி சுரேஷ் , கிளை அதிகாரி செளரவ்குமார், முன்னாள் மற்றும் இன்னாள் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 1977ல் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி நாகூர் கிளையை அன்றைய நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் செய்யது முஹம்மது கலீபா சாஹிபின் பாட்டானார் கலீபா சாஹிப் திறந்து வைத்துள்ளார் என்பது கூடுதல் செய்தி. விழாவின் இறுதியில் நாகூர் கிளை அதிகாரி செளரவ்குமார் நன்றியுரையாற்றினார்.