நாகேஷ் குடும்ப மூன்றாவது தலைமுறை நடிகர் ஹீரோவாக அறிமுகம்!

Filed under: சினிமா |

கடந்த 1933 ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள மொழிஞ்சிவாடியில் பிறந்தவர்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நாகேஷ். ஆரம்ப காலத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை செய்து வந்த நாகேஷ், நாடகத்துறையில் மீது உள்ள ஆர்வத்தால் நடிகரானார்.

அப்போது, பிரபல காமெடியனாக இருந்த சந்திரபாபுக்குப் போட்டியாகவும் அதேசமயம், தனது தனித்தன்மையுடன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திறமைக்கேற்ப பிரபல பட அதிபர்கள் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களில் காமெடியனாக்கினர். 1000 படங்களுக்கு மேல் நடித்த அவர் கடந்த 2008ம் ஆண்டு இயற்கை எய்தினார். நாகேஷ் குடும்பத்தில் இருந்து அவரின் மகனான ஆனந்த் பாபு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகராக வலம்வரமுடியவில்லை. இப்போது நாகேஷின் பேரன் “ஹனுமன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் கடவுள்கள் வேடம் போட்டு பிச்சை எடுப்பவர்களைப் பற்றிய படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் நாகேஷ் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறை நடிகர் தமிழ் சினிமாவுக்கு வரவுள்ளார்.