ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுத்த முதல் புகைப்படத்தை நாசா இன்று வெளியிட்டுள்ளது.
பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தாலும், முன்னொடியாக திகழ்வது நாசாதான். விண்வெளியில் உள்ள கோள்கள், மற்ற அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆராய்வதில் நாசா பல காலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்காக நாசா முன்னதாக விண்வெளிக்கு அனுப்பிய ஹபிள்ஸ் டெலஸ்கோப் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், நெபுலாக்கள், கேலக்ஸிகளை புகைப்படம் எடுத்து அனுப்பியது. கடந்த சில காலம் முன்னதாக நவீன வசதிகள் கொண்ட புதிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா விண்ணில் நிலைநிறுத்தியது. பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் தனது முதல் படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்படத்தை தற்போது அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். நட்சத்திர கூட்டங்கள், கேலக்ஸிகளின் திரள்கள் நிறைந்த கலர்புல்லான அந்த புகைப்படம் வான்வெளியில் உள்ள அதிசயத்தை உலகமே கண்டு வியந்துள்ளது. இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.