இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நான்காவது நாளாக முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள அளிக்கவில்லை என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து வருகின்றன. இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியதால் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவில்லை.