இன்று நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கிய போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து இருந்து 2 நபர்கள் குதித்து வந்தனர். அவர்களிடம் வண்ணங்களில் ஆன புகை வீசும் குப்பி இருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் எவ்வித ஆவணமும் இன்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட நீலம், அமோல் ஆகியோர் செல்போன், கைப்பை என எதையும் எடுத்து வரவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடையாள அட்டை உட்பட எந்த ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்தில் இருவரும் நுழைந்தது எப்படி என போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இந்த அத்துமீறல் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களது குறைகளை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். “நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறதே தெரியவில்லை” என்றும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துமீறி நுழைந்தவருக்கு அனுமதி சீட்டு பெற்றுக் கொடுத்தவர் பாஜக எம்பி பிரதாப் சிங் என தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் நடந்த இந்த அத்துமீறலுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.