திண்டுக்கல் மாவட்டத்தில் கோழியை கடித்த நாயின் உரிமையாளரை கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசிக்கும் விஜயனின் மகன் விஷ்ணு(26). இவர் செல்லப்பிராணியாக தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்தன் என்பவரை விஷ்ணுவின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தன் சென்று விஷ்ணுவிடம் போய் கேட்டுள்ளார். அப்போது, கோபமடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாகக் குத்தினார். இதில், பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்த விஷ்ணுவை அருகில் உள்ளோர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.