நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

Filed under: தமிழகம் |

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் மே 7ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று அது வலுப்பெற்று புயலாக மாறும் என்று தெரிவித்திருந்தது. நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதை அடுத்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை அதாவது மே 7ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.