நாளை விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்களை நடிகர் விஜய் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. பொங்கலுக்கு அஜீத்தின் “துணிவு” படமும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை உதய நிதியின் ரெட்ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. “துணிவு”க்குப் போட்டியாக “வாரிசு” வெளியாகவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாகவும், அதேசமயம், இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. எனவே, விஜய், நாளை பனையூரில் உள்ள தன் அலுவலகத்தில், 3 மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.