நேற்று திடீரென நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் சில நாடுகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்றிரவு திடீரென ரிக்டர் அளவில் 4.8 என நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் ஏற்கனவே விண்ணை முட்டும் கட்டிடங்கள் பல இருக்கும் நிலையில் அந்த நகரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நேரப்படி இரவு 7:35 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பூமிக்கு அடியில் 116.5 மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்போ, உயிர் சேதமோ இல்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் நியூயார்க்கில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது.