நெற்பயிர் காப்பீட்டுக்கு 15ம் தேதி கடைசி நாள்!

Filed under: தமிழகம் |

உழவர் நலத்துறை பருவ நெற்பயிர்களை வரும் 15ம் தேதிக்குள் காப்பிட செய்ய வேண்டுமென விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மழை காரணமாக பயிர் சேதமானாலும் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால் காப்பீடு செய்ய வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பா, பிசானப் பருவ பயிர் நெற்பயிர்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டுமென உழவர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உட்பட 27 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்றும், கன்னியாகுமரி, திண்டுக்கல், விருது நகர் தென்காசி, நெல்லை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் போக நெல்சாகுபடி சற்றுத் தாமதமாகத் தொடங்கப்பட்டதால், 6 மாவட்டங்களுக்கு டிசம்பர் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.