நெல்சனுடன் தனுஷ் திடீரென சந்திப்பு!

Filed under: சினிமா |

இயக்குனர் நெல்சன் “கோலமாவு கோகிலா” மற்றும் “டாக்டர்” என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் படத்தின் தோல்வியால் நெல்சனை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார். இப்போது அவர் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.