தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டதை தற்போது 2500 ரூபாய் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிரந்தர ஆசிரியர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். பகுதி நேர ஆசிரியராக பணிபுரிபவர்கள் மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கி வருகின்றனர். அவர்கள் தற்போது வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வருகின்றனர். தற்போது ரூ. 2500 ரூபாய் அவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இனி பகுதிநேர ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி நிலைமை சரியானவுடன் மேலும் சில வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.