பஞ்சாபில் ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Filed under: இந்தியா |

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி உள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் குளிரைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 8ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசு 2023 ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடுமுறை என்றும், ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. டில்லியில் ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், ஆனால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 2 முதல் 14 வரை வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.