படத்தைப் பார்த்து சிலிர்த்த சிம்பு.!

Filed under: சினிமா |

சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் “மாநாடு.” இப்படத்தை அடுத்து சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.” இத்திரைப்படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு ஒரு தனி வீடு எடுத்து, குடும்பத்தை குடியமர்த்தி, சென்னை திரும்பிய சிம்பு, “வெந்து தணிந்தது காடு” படத்தைப் பார்திருக்கிறார். இயக்குனர் கவுதம் மேனனின் மேக்கிங் வீடியோவை பார்த்ததும், மகிழ்ச்சியில் கவுதம் மேனனை கட்டியணைத்து, புகழ்ந்து மீண்டும் அவரது படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.