படுதோல்வியடைந்த பிரபல நடிகரின் திரைப்படம்!

Filed under: சினிமா |

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் “டிஎஸ்பி” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் “சேதுபதி” மற்றும் “செக்க சிவந்த வானம்“ ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த வாரம் வெளியான முதல்நாளில் இருந்து இந்த படம் படுமோசமான வசூலைப் பெற்று வருகிறது. தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த “மாமன்னன்” திரைப்படமும் திரையரங்கில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் கேரியரிலேயே மிக மோசமான வசூலைப் பெற்ற படம் என்ற மோசமான சாதனையை டிஎஸ்பி படம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்துக்கு சுத்தமாக ரசிகர்கள் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.