பட்டாசு வெடி விபத்து உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

Filed under: தமிழகம் |

நேற்று சிவகாசியில் இரண்டு இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரங்கபாளையம் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பட்டாசு கடை ஓனர் சுந்தரமூர்த்தி கனகராஜ் ராம்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்பு துறை இணை இயக்குனர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தல 3 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களுக்கு தல ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.