சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பதான்.” யஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு வெளியான பாலிவுட் படங்கள் வெற்றிபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஷாருக்கானின் பதான் படம் ஒட்டுமொத்த பாலிவுட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள இந்தியாவில் முதல் நாளன்று ரூ.57 கோடியும் இரண்டாவது நாளில் ரூ.70 கோடியும் மூன்றாவது நாளில் ரூ.130 கோடியும் வசூலித்துள்ளது. 2 நாட்களில் “பதான்” திரைப்படம் உலகம் முழுதும் ரூ.220 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் வட்டாரங்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.