நாளை உலகம் முழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தைப் பார்த்துள்ள ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு செல்கிறார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர், “ஜெயிலர் திரைப்படம் எப்படி வந்திருக்கு?” எனக் கேட்க “நீங்க பாத்துட்டு சொல்லுங்க. நான் சொன்னா சரியா இருக்காது” எனக் கூறியுள்ளார். மேலும் “இப்போது சூப்பர் ஸ்டார் தொடர்பான சர்ச்சை ஒன்று போயிட்டுருக்கே.. அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க” எனக் கேட்க, அதற்கு பதிலேதும் சொல்லாமல் “நன்றி” என சொல்லிவிட்டு கிளம்பி சென்றுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் விஜய் சூப்பர் ஸ்டாரா இல்லை ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரா என்று ரசிகர்களுக்குள் விவாதம் நடந்து வருகிறது.