வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகவும் கவனமாக இருப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில்நுட்ப துறையினரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இவரது இயக்கத்தில் வெளியான “பொல்லாதவன்” திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து, “ஆடுகளம்” மற்றும் “வடசென்னை” போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. முதல் படம் முதலே வெற்றித்தர தொடங்கிய இந்த கூட்டணி, “பொல்லாதவன்” தொடங்கி “அசுரன்” வரை மெகாஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ளது. “வடசென்னை பாகம் 2” உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இவர் எடுக்க ஆசைப்படும் ஒரு வெப் சீரீஸ் பற்றி கூறியுள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு இன்று பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரது அம்மா அற்புதம்மாளின் இத்தனை வருட போராட்டத்தையும், வாழ்க்கையையும் திரைப்படமாக எடுக்க விரும்புவதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.