பரத நாட்டிய பின்னணியில் நடிக்கும் ஜெயம் ரவி!

Filed under: சினிமா |

ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றிக்கூட்டணியாக அமைந்தது என்றே கூறலாம். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் “தில்லாலங்கடி” தவிர மற்ற அனைத்து படங்களும் ஹிட்டாகின. ஆனால் அவற்றில் “தனி ஒருவன்” தவிர மற்ற அனைத்துமே ரீமேக் படங்கள்.

அவர்களில் சூப்பர் ஹிட்டான “தனி ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோரின் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாம். அந்த படம் சலங்கை ஒலி பாணியில் பரதநாட்டியத்தை கதைக்களமாக கொண்ட படமாக உருவாகும் என சொல்லப்படுகிறது.