நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2024ம் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாதம் 18ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக, RTI கேள்விக்கு சுகாதார அமைச்சகம் பதிலளித்துள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு http://natboard.edu.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.