பாகிஸ்தானில் பொருளாதார பின்னடைவு காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை விட அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் பின்னுக்கு தள்ளப்படும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்திருக்கும் தகவலின் படி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு பாகிஸ்தானின் ரூபாய் படி 255 என்ற அளவில் வீழ்ச்சியடைந்ததால் பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலில் இருப்பதால் அரசு கட்டிடங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரூபாய் மதிப்பீடு வீழ்ச்சி அடைந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.