பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்!

Filed under: தமிழகம் |

பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்!

திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த வி பி துரைசாமி சில தினங்களுக்கு முன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த அவர்வாழ்த்து தெரிவித்தார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுவதாக கூறினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்த அவர் திமுகவில் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு அந்த பதவி வழங்கப்படுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதையடுத்த நாளே வி பி துரைசாமி பாஜகவில் சேர்ந்தார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில் அவர் விரைவில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார். அப்போது அவருக்கு முக்கியமான பதவி ஒன்று வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. அந்த பதவி தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டதை போல ஆளுநர் பதவியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.