பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வேண்டாம்; பிரேமலதா அதிர்ச்சி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவுடன் தேமுதிக அல்லது அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று இரு தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக கூறியுள்ளதால் எந்த கூட்டணியில் சேர்வது என்ற குழப்பத்தில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது. பாஜக கூட்டணியில் இணைந்தால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ராஜ்யசபா தொகுதி எம்பி மூலம் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரேமலதாவிற்கு பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம் அதிகம். ஆனால் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று திடீரென எதிர்ப்புகளை தெரிவித்துள்ளதால் பிரேமலதா அதிர்ச்சியடைந்துள்ளார்.