பாஜக தொடங்கிய வேல்யாத்திரை பின்னணியில் உள்ள இருவர் யார்?

Filed under: தமிழகம் |

தமிழக பாஜக தொடங்கிய வேல் யாத்திரை மற்றும் அதன் பின்னணியில் உள்ள இருவர் குறித்து அரசியல் விமர்சனங்கள், கருத்துக்களை தெரிவித்துவரும் விஜயகுமார் அருணகிரி கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-

தமிழக பாஜக வேல் யாத்திரையை துவக்கும் முன், தமிழக பாஜக தலைவர் முருகன், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை
சந்தித்து ஆலோசனை நடத்தினார் . கிஷன் ரெட்டி தெலுங்கானாவில் உள்ள பாஜகவில் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார்.

அடுத்து தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கிஷன் ரெட்டி தான் முதல்வர் என்கிறார்கள் அங்குள்ள பாஜகவினர்.தற்போதைய முதல்வர் சந்திரசேகரராவுக்கு பைட் கொடுக்கும்
வகையில் உத்தம் குமார் ரெட்டி என்பவர், காங்கிரஸ் தெலுங்கானா தலைவராக வந்தபொழுது, அங்கே ஒரு அரசியல் மாற்றம் நிகழ இருந்தது.

அதை பாஜக மிக சாமர்த்தியமாக முறியடித்து விட்டது. அதாவது கடந்த 2018 தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் உத்தம் குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையிலே இருந்தது.அந்த தேர்தலில் பாஜக மிக புத்திசாலித்தனமாக ஓட்டுக்களை பிரிக்க விரும்பாமல் காங்கிரஸ் ஜெயிக்க உள்ள தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு வாக்குகளை செலுத்தி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை ஜெயிக்க வைத்து விட்டார்கள்.

இதற்கு பின்னால் இருந்தவர் கிஷன்
ரெட்டி தான். இதனால் தெலுங்கானா காங்கிரசில் ராஜசேகர ரெட்டி ரேஞ்சுக்கு வர இருந்த உத்தம் குமார் ரெட்டி சட்டியாகி விட்டார். இப்பொழுது ரெட்டி மக்களிடம் கிஷன்ரெட்டி தான் பாப்புலர்.
கிஷன் ரெட்டி தன்னுடைய ஒரே ஒரு
அரசியல் யுக்தியில் தெலுங்கானாவில்
காங்கிரசின் வளர்ச்சியையும் ரெட்டி
சமுதாயத்தில் உத்தம் குமார் ரெட்டியின்
வளர்ச்சியையும் காலி செய்து விட்டார் என்றே கூறலாம்.

தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக வர வாய்ப்புகள் உள்ள கிஷான் ரெட்டி, கர்நாடகாவில் அடுத்த முதல்வராக வர உள்ள சி.டி ரவி இவர்கள் நேற்று தமிழகத்திற்கு வந்து வேல் யாத்திரைக்கு துணை நிற்கிறார்கள் என்றால் எதற்கு?தமிழகத்தில் பிஜேபி வளர வேல் யாத்திரைக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூற வந்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்