நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவின் முன்னணியில் உள்ளவர். இவர் “பேஷன்,” “குயின்,” “தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்,” “ஜான்சி ராணி,” தமிழில் “தலைவி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“சந்திரமுகி 2” திரைப்படத்தில் சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீப காலமாகவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் நடிகை கங்கனா ரனாவத், பாஜகவுக்கு ஆதரவாளராக இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் விளையாட்டு சினிமா பிரபலங்களுக்கு கௌரவ எம்பி பதவி வழங்கப்பட்டது.