பாடகர் வீட்டில் நகைகள் கொள்ளை?

Filed under: சினிமா |

பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தது. விசாரணையின் முடிவில் அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது,

பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், மார்ச் 30ம் தேதிதான் புகாரளிக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் கழித்து புகாரளித்தது குறித்து போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். மேலும் நகைகள் திருட்டு என பொய் புகாரளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.