இயக்குனர்கள் பாடல்கள் இயற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பெரும்பாலும் தாங்கள் இயக்கும் படங்களுக்கு மட்டுமே பாடல் இயற்றுவதுண்டு . ஆனால் ’ போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய நெருங்கிய நண்பர் அனிருத்தின் இசையில் ” வணக்கம் சென்னை’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ எங்கடி பொறந்தே …எங்கடி வளர்ந்த ‘ என்ற பிரபல பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆகிறார் இந்த வாய்ப்பு அளித்த இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கும் இசை அமைப்பாளர் அனிருதுக்கும் நன்றி என பெருமிதத்துடன் கூறினார் விக்னேஷ் ..
இதற்க்கு முன்னர் தன்னுடைய இயக்கத்தில் உருவான’ போடா போடி’ திரைப்படத்தில் மூன்று பாடல்களும் , விரட்டு என்ற படத்தில் ஒரு பாடலும் இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தன்னுடைய அடுத்த படத்தின் கதை விவாதத்துக்காக லண்டன் சென்றுள்ள விக்னேஷ் செப்டம்பர் மாதம் படப்பிடிப்புக்காக செல்ல உள்ளதாக கூறினார்.