பாபா படம் ரீ-ரிலீஸ்!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாபா” திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் “பாபா.” இப்படத்தை “பாட்ஷா,” “வீரா” படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டி, ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படு என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.