“பார்க்கிங்” படம் ஓடிடியில் ரிலீஸ்!

Filed under: சினிமா |

கடந்த டிசம்பர் 1ம் தேதி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் “பார்க்கிங்” படம் ரிலீசானது. இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி தயாரித்திருந்தது. படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவெடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது. இதையடுத்து இன்று இந்த படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.