பார்த்திபனின் டீன்ஸ் பட டீசர் எப்படி?

Filed under: சினிமா |

“இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்ட பார்த்திபன் படத்தில் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளளார். பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. சுற்றுலா செல்ல திட்டமிடும் இளைஞர் கூட்டம் ஒன்று ஒரு கிணற்றுக்குள் இருக்கும் பேயைக் கிளப்பிவிட அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை சொல்லும் விதமாக டீசர் உருவாகியுள்ளது.