பாலிவுட்டில் பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா திருமணமான பின் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர். கடந்த 2018ம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், பேசும்போது “நடிகர் நடிகைகள் வேறு யாரோ சொல்வதை பேசுபவர்கள். அல்லது உதட்டை அசைப்பவர்கள். அவர்கள் அதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.