சென்ற மத்திய அரசு மாநிலங்களின் பொது விநியோகத்திற்காக ஏராளமான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்து இருந்ததாகக் கூறுகிறார்கள். அதில் மோடிக்கு எதிராக உசுப்பிவிட்டு, காங்கிரஸ் ஆதரவை நாடி நல்லவன்போல் செயல்பட்ட நிதிஷ்குமார் ஒதுக்கீடு செய்த தானியங்களை பெற முயற்சி செய்யாமல் அலட்சியம் செய்ததாக உறுதிபட மத்திய அமைச்சகம் கூறுகிறது. சுயநல அரசியல்வாதிகளின் தன்னை ஆர்வம் மாநில மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்கிறார்கள்
காங்கிரஸ் மத்திய அரசு தமிழக நலன்களை புறக்கணித்து தன் சுய சேவைகளை பூர்தித்செய்த தமிழக காங்கிரஸ், தி.மு.க. அரசியல்வாதிகளை ஆதரித்து தமிழ் குலத்தை நான்குபுறமும் அழிக்கத் தொடங்கியதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் இந்திய ராணுவத்தில் வெளிநாட்டு நிதி பயன்படுத்த சென்ற மத்திய அரசு உற்சாகமாக ஆதரவளித்ததாம். அப்போது நாட்டு நலன் கருதி எதிர்கட்சிகள் குரலெடுக்கும்போது, அது தாமதப்படுத்தப்பட்டது. தற்போது பா.ஜ.க. சுயநல அரசியல்வாதிகள் மூலம் மறுபடியும் வெளிநாட்டு நிதி தொடர முயற்சி நடக்கிறதாம். இதனை புரிந்துகொண்ட பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் இந்திய பாதுகாப்புக்கு வெளிநாட்டு நிதி வர புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவர திட்டம் போட்டுள்ளார்களாம். இது இந்திய நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கு சரியான ஆப்பு என்கிறார்கள்.
பா.ஜ.க.வில் அத்வானியின் கை மொத்தமாக கீழ் இறக்கப்பட்டுவிட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் திறமையான நிர்வாகத்தை தன்னுடைய ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக சீரழித்து பா.ஜ.க.வின் வளர்ச்சியை குறைத்ததை தற்போது சுட்டிக்காட்டுகிறார்களாம்.
பிரதமராக உயரவேண்டிய பா.ஜ.க. தலைவர் அத்வானி அவருடைய அடிவருடிகளாலும், சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளாலும் அரசியல் நிலைஇழந்து காணப்படுவதாக தலைநகரில் குறிப்பிடுகிறார்கள். மேலும் காங்கிரஸ் இளம்புயல் ராகுல்காந்தி, ஒட்டுமொத்த அடிவருடிகளால் அரசியலில் தடுமாறி விழுந்துள்ளார் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் பா.ஜ.க.வின் எழுச்சியை தமிழக முதல்வர் தடுத்ததுபோல் மராட்டியம், கர்நாடகம், பீகார் தடுத்திருக்கலாம். அதாவது காங்கிரஸ் மேலும் 30 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருந்ததாம். ராகுல்காந்தி ஆதரவாளர்களின் அதிரடி அரசியல் அனைத்து ஆதரவையும் பா.ஜ.க.விற்கு பெறவைத்ததாக கூறுகிறார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சே பா.ஜ.க.வின் ஆதரவு தனக்கு கிடைக்க தன்னுடைய இந்திய ஆதரவாளர்களை ஊக்குவிக்க தொடங்கி விட்டார். தமிழன் என்று மார்தட்டும் தமிழக அரசியல்கட்சிகள் (துட்டு, மணி, பணம்) நிதிக்கு அடிமையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற கருத்து மத்திய வெளியுறவுத்துறையில் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உறுதியான நடவடிக்கைகள் இலங்கை அதிபர் மட்டுமல்ல சுயநல பா.ஜ.க. அரசியல்வாதிகளையும் மிரள வைத்துள்ளது.