பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்டரால் பரபரப்பு!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

“பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆன்லைன் ரம்மியை விட மோசமானது டாஸ்மாக், அதை மூடுங்கள்” என்று பதிவிட்டள்ளார்.

இதுவரையிலும் ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. “ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது, எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள். குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம், இக்கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு எழுக்காதீர்கள். உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது” என்று பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.