ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவி போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டு விட்டால், பிசிசிஐ அடுத்த தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லீ தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். பிசிசிஐயின் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளன.