நடிகர் விஷால் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள காசிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள நவீன வசதிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, பிரதமர் மோடியைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதிய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி கோயில் உலகப் பிரசித்தி பெற்று இந்துகளின் புனிததளமாகக் கருதப்படுகிறது. எனவே நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள் கங்கை நதியில் புனித நீராடி விட்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து செல்கின்றனர். பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்களவை தொகுதியாக வாரணாசியில் கடந்த 2019ம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டிய ரூ.339 மதிப்பிலான புதிய வளாகம், திறக்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் வசதி மையம், உணவகம், உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பயனடைந்து வருகின்றன. எனவே, தர்ஷன் பூஜாவை முன்னிட்டு, நடிகர் விஷால் காசிக்குச் சென்றிருந்த நிலையில், அவர் தனது டுவிட்டரில், “அங்குள்ள கங்கையில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்தேன். அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய கட்டமைப்புகள், மறுசீரமைப்புகள் எல்லாம் அற்புதமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் அங்கு செல்லும் வசதி உள்ளது. இந்த வசதியை செய்த உங்களுக்கு நன்றி! கடவுள் உங்களுக்கு ஆசி புரிவாராக” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.