பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் புறப்பட்டு சென்றார். தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைனில் வாழும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர். உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து போது ரஷியா உடனான போரில் உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த காணொளி காட்சிகளை பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி திரையிட்டு காண்பித்தார். மேலும், போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கினார். ரஷ்யா &- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.