பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு அளிக்க வேண்டாம் என நடிகர் கிஷோர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தை ஒடுக்க ஹரியானா அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகர் கிஷோர் “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் பேரணியை டில்லிக்கு நுழைய விடாமல் தடுத்து வரும் காவல்துறையினருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளருக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும். நமது விவசாயிகள் என்ன தேச விரோதிகளா? அவர்களுக்கு போராட உரிமை இல்லையா?” என நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.