பிரபல இயக்குனர் பேரரசு தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் மற்றும் விஜய் போன்ற பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் அக்னிபாத் திட்டம் பற்றி கூறியது, “அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயிலை கொளுத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அவர்கள் தேசத்துரோகிகள். தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. இது போன்ற வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து எவ்வாறு நாட்டை காப்பாற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.