விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீசான “லியோ” திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.
இந்நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தாய்லாந்துக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். இப்போது படத்தின் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர் “நேற்றிரவு ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சியை படக்குழு படமாக்கி முடித்துள்ளார்கள். அதனால் இன்று அவர்களுக்கு ஓய்வுநாள்” எனக் கூறியுள்ளார்.