நடிகை நவ்யா நாயர் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரியுடன் நெருங்கிப் பழகியது தெரியவந்துள்ளது.
நடிகை நவ்யா நாயர் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர், “இஷ்டம்,” “அழகிய தீயே,” “ஆடம் கூத்து,” “பொக்கிஷம்“ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்திய வருவாய்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2011ம் ஆண்டு அவரது குடும்ப சொத்து ரூ.1.4 லட்சமாக இருந்தது. 2022ல் ரூ.2.1 கோடியாக உயர்ந்தது. இதனால் இவர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. இவ்வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் தொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்குத் தொடர்பாக கடந்த ஜூன் மதம் சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சச்சின் சாவந்த் நடிகை நவ்யா நாயருடன் நெருங்கிப் பழகியதாகவும், அவருக்கு நகை உள்ளிட்ட பல விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.