பிரபல நடிகை கர்ப்பம்!

Filed under: சினிமா |

யூடியூப் சேனலில் பிரபல நடிகை பூர்ணா கர்ப்பமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகை பூர்ணா “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு,” “காப்பான்,” “ஸ்ரீமஹாலட்சுமி,” “அவுனு,” “சீமா டபகை” மற்றும் “அகண்டா” போன்ற படங்களில் நடித்துள்ளார். அசின் போன்ற முகத்தோற்றம் கொண்ட இவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம் ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து கொண்டார். நடிகை பூர்ணா தற்போது கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.