பிரபாஸின் கல்வி திரைப்படம் சாதனையில் வசூல்!

Filed under: சினிமா |

“கல்வி” திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். “கல்கி” திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது.

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனைப் படைத்த ஷாருக் கானின் ‘ஜவான்’ படம் இந்தியாவில் செய்த வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஜவான் திரைப்படம் இந்தியாவில் 760 கோடி ரூபாய் வசூலித்ததது. கல்கி அதை 40 நாட்களில் முறியடித்துள்ளது. இந்தியில் 350 கோடி ருபாயும், தெலுங்கில் மட்டும் 335 கோடி ரூபாயும், மற்ற இந்திய மொழிகளில் 75 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது கல்கி.