நடிகர் பிபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ரிலீசான அவரின் “ஆதிபுருஷ்” திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் “சலார்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது “கே.ஜி.எப்” இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை “கே.ஜி.எப்” தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜனவரி மாதத்துக்குத் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அந்த தேதியில் இப்போது வேறு சில படங்கள் ரிலீஸுக்கு திட்டமிட்டு வருகின்றன. பாகுபலிக்குப் பிறகு பிரபாஸுக்கு ஹிட் அமையாததால் அவரின் “சலார்” திரைப்படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.



